Saturday, Aug 08, 2020, 13:59:11
தலைப்பு :

தமிழ் மொழி : பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்

நிருபரின் பெயர் : Pakalavan News
  • புதுப்பிப்பு நேரம் : May 08, 2020 Friday
  • 107 views

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்



தமிழில் நிறய பிறமொழி கலப்புகள் ( அரபுச் சொற்கள்‎, ஆங்கிலச் சொற்கள்‎, இந்திச் சொற்கள்‎, உருதுச் சொற்கள்‎, சிங்களச் சொற்கள்‎, பாரசீக சொற்கள், துருக்கிச் சொற்கள்‎, பிரெஞ்சுச் சொற்கள்‎, போர்த்துக்கீசச் சொற்கள்‎ ) உள்ளது. இது போன்ற பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.



வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்

இந்த பதிப்பில் குறிப்பாக நம் தாய் மொழியில் கலந்துள்ள வடமொழி கலப்பை பற்றி பாற்கலாம். மற்றொரு பதிப்பில் , தமிழில் கலந்துள்ள மற்ற மொழிகளின் கலப்பை பற்றி பார்க்கலாம்.



List of Sanskrit words in Tamil



அகங்காரம் – செருக்கு

அக்கணம் – அப்பொழுது

அக்கிரமம் – முறைகேடு

அசலம் – உறுப்பு, மலை

அசூயை – பொறாமை

அதிபர் – தலைவர்

அதிருப்தி – மனக்குறை

அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது

அத்தியாவசியம் –இன்றியமையாதது

அநாவசியம் -வேண்டாதது

அநேகம் – பல

அந்தரங்கம்- மறைபொருள்

அபகரி -பறி, கைப்பற்று

அபாயம் -இடர்

அபிப்ராயம் -கருத்து

அபிஷேகம் -திருமுழுக்கு

அபூர்வம் -புதுமை

அமிசம் -கூறுபாடு

அயோக்கியன் -நேர்மையற்றவன்

அர்த்தநாரி -உமைபாகன்

அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த

அர்த்தம் -பொருள்

அர்த்த ஜாமம் – நள்ளிரவு

அர்ப்பணம் -படையல்

அலங்காரம் -ஒப்பனை

அலட்சியம் – புறக்கணிப்பு

அவசரமாக – உடனடியாக, விரைவாக

அவஸ்தை – நிலை, தொல்லை

அற்பமான – கீழான, சிறிய

அனாதை – திக்கற்றவர்

அற்புதம் – புதுமை

அனுபவம் – பட்டறிவு

அனுமதி – இசைவு

அங்கம் – உடல்உறுப்பு

அங்கீகாரம் – ஒப்புதல்

அங்கத்தினர் – உறுப்பினர்



ஆச்சரியம் – வியப்பு

ஆச்சரியக்குறி – வியப்புக்குறி

ஆக்ஞை – ஆணை, கட்டளை

ஆட்சேபணை – தடை, மறுப்பு

ஆதி – முதல்

ஆபத்து – இடர்

ஆமோதித்தல் – வழிமொழிதல்

ஆயுதம் – கருவி

ஆரம்பம் -தொடக்கம்

ஆராதனை -வழிபாடு

ஆரோக்கியம் – உடல்நலம்

ஆலோசனை – அறிவுரை

ஆனந்தம் – மகிழ்ச்சி



இஷ்டம் – விருப்பம்

இங்கிதம் – இனிமை

இரகசியம் – மறைபொருள், கமுக்கம்

இரதம் – தேர்

இரத்தம் – குருதி,உதிரம்

இராகம் – பண்

இராத்திரி – இரவு,அல்

இராச்சியம்,தேசம் – நாடு

இராணுவம் – படை



ஈன ஜன்மம் – இழிந்த பிறப்பு

ஈனஸ்வரம் – மெலிந்த ஓசை



உக்கிரமான – கடுமையான

உச்சரிப்பு – மொழியோசை

உபசாரம் – முகமன் கூறல்

உபயோகம் – பயன்

உதாசீனம் – பொருட்படுத்தாமை

உத்தரவாதம் – பிணை, பொறுப்பு

உத்தரவு – கட்டளை

உல்லாசம் – களிப்பு

உற்சாகம் – ஊக்கம்



ஐதீகம் – சடங்கு, நம்பிக்கை



ஔடதம் – மருந்து

பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் என்ற இந்த பதிவில் நாம் பார்ப்பது வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களே.



மேலும் ஒரு பதிவில் தமிழில் கலந்துள்ள அரபுச் சொற்கள்‎, ஆங்கிலச் சொற்கள்‎, இந்திச் சொற்கள்‎, உருதுச் சொற்கள்‎, சிங்களச் சொற்கள்‎, பாரசீக சொற்கள், துருக்கிச் சொற்கள்‎, பிரெஞ்சுச் சொற்கள்‎, போர்த்துக்கீசச் சொற்கள் போன்றவற்றை விரிவாக பார்போம்.





கர்ப்பக்கிருகம் – கருவறை

கர்ப்பப்பை – கருப்பை

கர்மம் – செயல்

கலாச்சாரம் – பண்பாடு

கலாரசனை – கலைச்சுவை

கல்யாணம் – மணவினை, திருமணம்

கஷ்டம் – தொல்லை, துன்பம்

கடிதம் – மடல்

கரம் – கை

கதிரை – நாற்காலி, அணை, இருக்கை

கஷ்டம் – தொல்லை

கட்டில் – மஞ்சம்

கடிகாரம் – கன்னல்,மணிக்கூடு

கறார் விலை – ஒரே விலை

கஜானா – கருவூலம்

கீதம் – பாட்டு, இசை

கீர்த்தி – புகழ்

கீர்த்தனை- பாமாலை, பாடல்

கோஷம் – ஒலி



ஞாபகம் படுத்துதல் – நினைவூட்டல்



சகலம் – எல்லாம், அனைத்தும்

சகஜம் – வழக்கம், இயல்பு

சகி – தோழி

சகோதரி – உடன் பிறந்தவள்

சங்கடம் – இக்கட்டு, தொல்லை

சங்கதி – செய்தி

சங்கோஜம் – கூச்சம்

சதம் – நூறு

சதவீதம், சதமானம் – விழுக்காடு

சதா – எப்பொழுதும்

சதி- சூழ்ச்சி

சத்தம் – ஓசை, ஒலி

சந்தானம் – மகப்பேறு

சந்தேகம் – ஐயம்

சந்தோஷம் – மகிழ்ச்சி

சபதம் – சூளுரை

சம்சாரம் – குடும்பம், மனைவி

சம்பந்தம் – தொடர்பு

சம்பவம் – நிகழ்ச்சி

சம்பாதி – பணம் ஈட்டு, பொருளீட்டு

சம்பிரதாயம் – மரபு

சம்மதி – ஒப்புக்கொள்

சமாச்சாரம் – செய்தி, சங்கதி

சரணாகதி – அடைக்கலம்

சரித்திரம் – வரலாறு

சரீரம் – உடல்

சருமம் -தோல்

சர்வம் – எல்லாம்

சாதாரணம் – எளிமை, பொதுமை

சாதித்தல் – நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்

சாதம் – சோறு

சாந்தம் – அமைதி

சாகசம் – துணிவு, பாசாங்கு

சாராமிசம் – பொருட்சுருக்கம்

சாயந்திரம் – மாலை வேளை, அந்திப் பொழுது

சாவகாசம் – விரைவின்மை

சாஸ்திரம் – நூல்

சாசுவதம் – நிலை

சிகிச்சை – மருத்துவம்

சித்தாந்தம் – கொள்கை, முடிவு

சித்திரம் – ஓவியம்

சிநேகிதம் – நட்பு

சிம்மாசனம் – அரியணை

சிரத்தை – அக்கறை, கருத்துடைமை

சிரமம் – தொல்லை

சின்னம் – அடையாளம்

சீக்கிரமாக – விரைவாக

சுதந்திரம் – தன்னுரிமை, விடுதலை

சுத்தமான – தூய்மையான

சுபாவம் – இயல்பு

சுலபம் – எளிது

சுவாரஸ்யமான – சுவையான

சுயம்வரம் – மணத்தன்னேற்பு

சேவை – பணி

சேனாதிபதி – படைத்தலைவன்

சௌகர்யம் – வசதி, நுகர்நலம்

சௌக்கியம் – நலம்

சோகம் – ஈடு செய்யக்கூடிய துயரம்.

(ஈடு செய்ய ஏலாத இழப்பால் ஏற்படும் துயரத்திற்கு – துக்கம்)





தசம் – பத்து

தத்துவம் – உண்மை

தம்பதியர் – கணவன் மனைவி, இணையர்

தற்காலிகம் – நிலையற்ற, நிரந்தரமில்லாத

தரிசனம் – காட்சி

தர்க்கம் – வழக்கு

தலைப்பிரசவம் – முதல் மகப்பேறு

தர்க்க வாதம் – வழக்காடல்

தாபம் – வேட்கை

திகில் – அதிர்ச்சி

திருப்தி – நிறைவு

தினசரி – நாள்தோறும்

தினம் – நாள்

திவசம் – நாள் ( மூதாதையருக்கு உணவு படைக்கும் சடங்கு)

திவ்வியம் – தெய்வத் தன்மையுள்ள

தீர்க்கதரிசி _ ஆவதறிவார்

துரதிருஷ்டம் – பேறின்மை

துர்க்கை – பாலைநிலத்தின் தேவதை

துரிதம் – விரைவு

துரோகம் – வஞ்சனை

துவம்சம் – அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்

தேகம் – உடல்

தேசம் – நாடு

தோஷம் – குறை, குற்றம்

தைரியம் – துணிவு



நட்சத்திரம் – விண்மீன், நாள்மீன்

நமஸ்காரம் – வணக்கம்

நர்த்தனம் – ஆடல், நடனம்,கூத்து

நவீனம் – புதுமை

நவீன பாணி – புது முறை

நஷ்டம் – இழப்பு, சேதம்

நாசம் – அழிவு, வீண்

நாசூக்கு – நயம்

நாயகன் – தலைவன்

நாயகி – தலைவி

நிஜம் – உண்மை, உள்ளது

நிசபதமான – ஒலியற்ற, அமைதியான

நிச்சயம் – உறுதி

நிச்சயதார்த்தம் – மண உறுதி

நிதானம் – பதறாமை

நித்திய பூஜை – நாள் வழிபாடு

நிரூபி – மெய்ப்பி, நிறுவு

நிருவாகம் – மேலாண்மை

நிதி – பொருள்,செல்வம், பணம்

நீதி – அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை



பத்தினி – கற்புடையாட்டி

பகிரங்கம் – வெளிப்படை

பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து

பரவசம் – மெய்மறத்தல்

பராக்கிரமம் – வீரம்

பராமரி – காப்பாற்று , பேணு

பரிகாசம் – இகழ்ச்சிச் சிரிப்பு

பரிசோதனை – ஆய்வு

பரீட்சை – தேர்வு

பலவந்தமாக – வற்புறுத்தி

பலவீனம் – மெலிவு, வலிமையின்மை

பலாத்காரம் – வன்முறை

பாணம் – அம்பு

பாதம் – அடி

பாரம் – சுமை

பால்யம் – இளமை

பிம்பம் – நிழலுரு

பிரகாசம் – ஒளி, பேரொளி

பிரகாரம் – சுற்று

(அதன்)பிரகாரம் – (அதன்)படி

பிரசங்கம் – சொற்பொழிவு

பிரசுரம் – வெளியீடு

பிரச்சினை – சிக்கல்

பிரதிநிதி – சார்பாளர்

பிரதிபலித்தல் – எதிரியக்கம்

பிரதிபிம்பன் – எதிருரு

பிரத்தியோகம் – தனி

பிரபலம் – புகழ்

பிரமாதமான – பெரிய

பிரமிப்பு – திகைப்பு

பிரசவம் – மகப்பேறு

பிரயோகி – கையாளு

பிரயோசனம் – பயன்

பிரவாகம் – பெருக்கு

பிரவேசம் – நுழைவு, புகுதல், வருதல்

பிரார்த்தனை – தொழுகை,

பிரியம் – விருப்பம்

பிரேமை – அன்பு

பீடிகை – முன்னுரை

புண்ணியம் – நல்வினை

புத்தி – அறிவு

புத்திரன் – புதல்வன்

புருஷன் – ஆண், கனவன்

புனிதமான – தூய

புஷ்பம் – மலர், பூ

புஜபலம் – தோள்வன்மை

பூஜை – வழிபாடு

பூர்த்தி – நிறைவு

பூஷணம் – அணிகலம்

போதனை – கற்பித்தல்



மகான் – பெரியவர்

மகாயுத்தம் -பெரும்போர்

மத்தியஸ்தர் – உடன்படுத்துபவர்

மத்தியானம் – நண்பகல்

மந்திரி – அமைச்சர்

மனசு – உள்ளம்

மனிதாபிமானம் – மக்கட்பற்று

மானசீகம் – கற்பனை

மல்யுத்தம் – மற்போர்

மந்திரி – அமைச்சன்

மந்திரம் – மறைமொழி

மரணம் – சாவு, இறப்பு

மாமிசம் – இறைச்சி

மார்க்கம் – நெறி, வழி

மிருகம் – விலங்கு

முகூர்த்தம் – நல்வேளை

முக்கியம் – முகன்மை

முகாம் – பாசறை

மோசம் – கேடு



யந்திரம் – பொறி

யாகம் – வேள்வி

யுத்தம் – போர்

யூகம் – உய்த்துணர்தல்

யூகி – உய்த்துணர்

யோக்யதை – தகுதி



ரதம் – தேர்

ரத சாரதி- தேரோட்டி

ராணி – அரசி

ராத்திரி – இரவு

ராச்சியம் – நாடு,மாநிலம்

ராஜா – மன்னன்

ரசம் – சாறு, சுவை



லட்சம் – நூறாயிரம்

லட்சணம் – அழகு

லட்சியம் – குறிக்கோ





வதம் – அழித்தல்

வதனம் – முகம்

வம்சம் – கால்வழி

வஸ்திரம் – துணி, ஆடை

வாஞ்சை – பற்று

வாயு – காற்று

வாகனம் – ஊர்தி

வாதம் – சொற்போர்

வாத்தியம் – இசைக்கருவி

வார்த்தை – சொல்

வாரம் – கிழமை

வாந்தி பேதி – கக்கல் கழிச்சல்

வாயு – காற்று

வாலிபர் – இளைஞர்

விக்கிரகம் – வழிபாட்டுருவம், திருவுருவம்

விசாரம் – கவலை

விசாலமான – அகன்ற

விசித்திரம் – வேடிக்கை

விஷேசம் – சிறப்பு

விஞ்ஞானம் – அறிவியல்

விஷயம் – செய்தி

விதானம் – மேற்கட்டி

விநாடி – நொடி

வித்தியாசம் – வேறுபாடு

விபூதி – திருநீறு , பெருமை

விமோசனம் – விடுபடுதல்

விரதம் – நோன்பு

விவாகம் – திருமணம்

விவாதி -வழக்காடு

விசயம், விஷயம் – பொருள், செய்தி

விசேஷம் – சிறப்பு

விபத்து – துன்ப நிகழ்ச்சி

விரதம் – நோன்பு

விஷம் – நஞ்சு

விஜயம் – பயணம்

வீரம் – மறம்

வேகம் – விரைவு

வேதம் – மறை

வேதவிற்பனன்ர் – மறைவல்லார்

வேதியர் – மறையவர்

வீதி – தெரு, சாலை

வைத்தியசாலை – மருத்துவமனை



ஜனநாயகம் – குடியாட்சி

ஜனம் – மக்கள்

ஜனனம் – பிறப்பு

ஜமீன் – நிலம்

ஜமீன்தார் – நிலக்கிழார்

ஜல்லிக்கட்டு – மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல்

ஜன்னல் – சாளரம்

ஜனங்கள் – மக்கள்

ஜயம் – வெற்றி

ஜாதகம்- பிறப்புக் குறிப்பு

ஜாலம் – வேடிக்கை

ஜாக்கிரதையாக – விழிப்பாக

ஜாஸ்தி – மிகுதி

ஜீவன் – உயிர்

ஜூரம் – காய்ச்சல்

ஜென்மம் – பிறவி

ஜோதி – ஒளி

ஜோடி – இணை

ஜோடித்தல் – அழகு செய்தல்



ஸந்ததி – கால்வழி

ஸமத்துவம் – ஒரு நிகர்

ஸமரசம் – வேறுபாடின்மை

ஸமீபம் – அண்மை

ஸம்ஹாரம் – அழிவு

ஸோபை – பொலிவு

ஸௌந்தர்யம் – பேரழகு

ஸ்தாபனம் _ நிறுவனம்

ஸ்தானம் – இடம்


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com