Tuesday, Aug 04, 2020, 10:34:52
தலைப்பு :

நாட்டுக்கோழி மிளகுக்கறி செய்வது எப்பிடி

நிருபரின் பெயர் : Pakalavan News
  • புதுப்பிப்பு நேரம் : Apr 25, 2020 Saturday
  • 89 views

தேவையானவை



நாட்டுக்கோழிக்கறி-1/2 கிலோ

தயிர்-1கப்

மஞ்சள் தூள்-சிறிதளவு

வெள்ளை மிளகு தூள்    -2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது    -1 ஸ்பூன்

பல்லாரி-1

கரம் மசாலா-3 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு



 



செய்முறை :



நாட்டுக்கோழிக்கறியை கழுவி தண்ணீரை வடிகட்டி, மஞ்சள் தூளை பிரட்டி, ஒன்றரை மணி நேரம் தனியாக வைக்கவும். பல்லாரியை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பல்லாரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதனுடன் தயிர், மிளகு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், நாட்டுக்கோழிக்கறியை அரை மணி நேரம் வரை வேக வைக்கவும். அவ்வப்போது கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கோழிக்கறி நன்கு வெந்ததும், சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். மிளகு கறியுடன் கலந்ததும் சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு இறக்கவும். இட்லி, சூடான சாதத்துக்கு ஏற்ற சுள் சுவையில் நாட்டுக்கோழி மிளகுக்கறி ரெடி.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com