Saturday, Aug 08, 2020, 15:48:18
தலைப்பு :

புதையல் தோண்டிய 6 பேர் நவீன கருவியுடன் கைது

நிருபரின் பெயர் : kajal
  • புதுப்பிப்பு நேரம் : Jun 15, 2020 Monday
  • 107 views

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.



பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும் பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களும் பேசாலை பொலிஸரினால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து நவீன கருவி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்ட குறித்த 6 நபர்களும் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (14) மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.



இதன் போது குறித்த 6 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com