Tuesday, Aug 04, 2020, 10:48:40
தலைப்பு :

கொரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டிற்குள் தயாரிக்கப்படுமா? – டிரம்பின் கருத்தை மறுக்கும் அதிகாரி

நிருபரின் பெயர் : Arsha
  • புதுப்பிப்பு நேரம் : Jul 06, 2020 Monday
  • 24 views

அமெரிக்காவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், அந்நாட்டின் அதிபர் டிரம்ப் இந்த வருட இறுதிக்குள் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து தயாராகும் என தெரிவித்தது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார்.



"தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்பதை என்னால் கூற இயலாது" என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீஃபென் ஹான் தெரிவித்துள்ளார்.



தடுப்பு மருந்து உருவாக்கம் என்பது தரவுகளையும், அறிவியலையும் பொறுத்தது என ஹான் தெரிவித்துள்ளார்.



தடுப்பு மருந்து, மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, வைரஸுடன் போராடுவதற்கு ஏற்றவாறு பயிற்சியளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.



வெள்ளை மாளிகையின் கொரோனா தடுப்பு படையின் உறுப்பினரான ஹானிடம், இந்த ஆண்டுக்குள் கொரோவிற்கான தடுப்பு மருந்து தயாராகும் என டிரம்ப் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது.



கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து டிரம்ப் கூறி வரும் சில கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.



சமீப நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 20 லட்சத்து 80 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், கொரோனா வைரஸுக்கு எதிரான வலுவான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என ஜூன் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.



ஸ்டீஃபென் ஹான்


"ஒரு வருடத்திற்குள் தடுப்பு மருந்து கண்டறியப்படும் என்பதுதான் கணிப்பு. அந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டால் சில மாதங்களில் கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்," என்றார் டெட்ரோஸ்.



இன்னும் சில நிபுணர்கள், குறைந்தது அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை தடுப்பு மருந்து கிடைப்பது கடினம் என தெரிவிக்கின்றனர்.



ஏபிசி நியூஸ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த நேர்காணலில், "தடுப்பு மருந்து உருவாக்கும் பணி அதீத வேகத்துடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அது எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை." என ஹான் தெரிவித்தார்.



மேலும் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், "கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேருக்கு அது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என டிரம்ப் கூறியது குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com