Tuesday, Aug 04, 2020, 10:37:27
தலைப்பு :

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை

நிருபரின் பெயர் : Ammu
  • புதுப்பிப்பு நேரம் : Jul 26, 2020 Sunday
  • 15 views

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் 29ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.



இதன்போது ஊரடங்கு தளர்வு, நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.



கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட ஊரடங்கு தற்போது அமுலில் உள்ளது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6ஆம் கட்ட ஊரடங்கு எதிர்வரும் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில் ஜூலை 31ஆம் திகதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ஆம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளார்.



 


செய்திகளைப் பகிரவும்


இது போன்ற மேலும் செய்திகள்

© All rights reserved © 2020 PAKALAVAN
Website by yarlsri.com