உலகம்

மியன்மாரில் சிறை வைக்கப்பட்டிருந்த றொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை

மியன்மாரில் கடந்த 500 தினங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த றொய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் இரகசிய சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இவர்களுக்கான சிறை தண்டனை இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை தோற்றுவித்தது.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் எவ்வித குற்றங்களையும் இழைக்கவில்லை எனத் தெரிவித்து அவர்களின் விடுதலையை றொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts

2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்!

admin

உக்ரேனில் பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்றும் – இத்தாலிய பிரதமர் மெலோனி

Suki

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய விஜயம் திடீர் ரத்து!

admin

Leave a Comment