உலகம்

இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடத் தயார் – ட்ரம்ப்

இரண்டாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிடுவது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ பகுதியில் வைத்து எதிர்வரும் 18ஆம் திகதி இதுகுறித்த அறிவித்தலை வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘எதிர்வரும் ஜீன் 18ஆம் திகதி ஃபுளோரிடா மாகாணத்தின் ஒர்லாண்டோ நகரில் அம்வே செண்டரில் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்க உள்ளேன். இந்த வரலாற்று பேரணியில் அனைவரும் இணைவீர்’ என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதில் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்தினை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் கமலா ஹரீஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பாக தாம் மீண்டும் போட்டியிட விரும்புவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ட்ரம்ப்-கிம் இரண்டாவது உச்சிமாநாடும் ஆசியாவில்!- பொம்பியோ அறிவிப்பு

admin

இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ட்ரம்ப்

admin

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை

admin

Leave a Comment