விளையாட்டு

தொடரை வென்றது இங்கிலாந்து!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பார்ல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, குயிண்டன் டி கொக் 30 ஓட்டங்களையும், ஜோர்ஜ் லிண்டே 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், அடில் ராஷித் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்தான், டொம் கர்ரன் மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியை பெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 55 ஓட்டங்களையும், ஓய்ன் மோர்கன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்ஸி 3 விக்கெட்டுகளையும், லுங்கி ங்கிடி 2 விக்கெட்டுகளையும், கார்கிஸோ ரபாடா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 40 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்ரிகள் அடங்களாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணியின் டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டார்.