இலங்கை

கொழும்பில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானது முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் 10 ஆயிரத்து 140 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேநேரம், நேற்று கம்பஹா மாவட்டத்தில் 188 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 98 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை கண்டியில் 27 தொற்றாளர்களும் குருநாகலையில் 24 தொற்றாளர்களும் இரத்தினபுரியில் 24 தொற்றாளர்களும் மற்றும் புத்தளத்தில் 29 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கூட்டணிக்குள் ஏற்படும் பிளவு எதிர்தரப்பினருக்கு சாதகமாகவே அமையும்: ரோஹித அபேகுணவர்தன

Suki

ஹோமாகமயில் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Suki

சீரற்ற வானிலை – 117 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்

Suki

Leave a Comment