அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளதுடன், விவாதங்கள் நிறைவடைந்ததும் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிக்க, ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 comment