Uncategorized

தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் – கம்மன்பில

எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருணாகலில், அடிப்படைவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “திருமண சட்டம் நிச்சயம் மாற்றப்படுமென நாம்  கூறியவுடன் அசாத் சாலி கூறுகின்றார் உங்களது சட்டத்தை நீங்கள் பாருங்கள் எங்களது சட்டத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்கிறார்.
நாம் அசாத் சாலிக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். முஸ்லிம்கள் வியாபாரத்துக்காக இலங்கைக்கு வருகை தந்து, இங்குள்ள சிங்களவர்களை திருமணம் செய்து உள்ளனர்.
ஆகையாலேயே ஒரு ஆண் ஒரு பெண்ணை மாத்திரமே திருமணம் செய்ய வேண்டுமென நாம் வலியுறுத்துகின்றோம்.
18 வயதுக்கு மேற்பட்ட பின்னரே திருமணம் செய்ய முடியும். அதிலும் மணப்பெண்ணின் சம்மதம் மிகவும் அவசியம்.
நியாயமான காரணமின்றி விவாகரத்து செய்ய முடியாது என்பதுடன் பெண்கள் அனைவருக்கும் வேலை செய்யும் உரிமையும் உள்ளது.
முஸ்லீம் சமூகம் வகாப் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. அதேபோன்று  அரசாங்கமும் தீவிரவாதத்திற்கு அடிபணிந்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் நிச்சயம்  தண்டிக்கப்படுவார்கள்.
அதாவது எமது அரசாங்கத்தில் ஜனாதிபதி ஆணைக்குவொன்றை அமைத்து அதனூடாக முறையான விசாரணையை முன்னெடுப்போம்.
இதனூடாக தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் ஆகியோரின் மனகாயங்களை எமது அரசாங்கம் நிச்சயம் குணப்படுத்தும்” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் ஐ.நா. பாதுகாப்பு சபை வலியுறுத்தல்

admin

வெளியாகிறது சஹரானின் DNA அறிக்கை!

admin

எதிர்வரும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை: இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை.

Suki

Leave a Comment