புதுச்சேரி சட்டப்பேரவையின் வரவு- செலவுக்கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
2019- 2020 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுக்கூட்டத்தொடரில் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தவுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன் பொலிஸாரும் பேரவை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஆளும் கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்தும், பேரவையில் பேசவேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
previous post
next post