இந்தியா

பொரிஸ் ஜோன்சனை சந்தித்து பேசினார் மோடி!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகின்றது.
குறித்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மோடிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தநிலையிலேயே குறித்த மாநாட்டின் இடைநடுவே பொரிஸ் ஜோன்சனிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடி, பொரிஸ் ஜோன்சனை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதன்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் இந்தியா – பிரித்தானியா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்’ என பதிவிட்டுள்ளார்.

Related posts

இலஞ்சம் பெறக்கூடாதென தாய் சத்தியம் வாங்கியுள்ளார்: மோடி

admin

ஜெய்பீம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Suki

நீண்ட துார வெடிகுண்டுச் சோதனை- வெற்றி

Suki

Leave a Comment