உலகம்

கடற்படைப் பயிற்சிகளை நிறுத்துமாறு தென்கொரியாவிடம் கோரிக்கை!

சர்ச்சைக்குரிய டகேஷிமா தீவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடற்படைப் பயிற்சிகளை நிறைவிற்கு கொண்டுவருமாறு தென் கொரிய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும், கடற்படைப் பயிற்சிகளை முடிவிற்குக் கொண்டுவருமாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் குறித்த நடவடிக்கைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் எனவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் கொரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டகேஷிமா தீவுகளுக்கு ஜப்பான் உரிமைகோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

3000 ஆண்டுகள் பழைமையான கோயில் கண்டுபிடிப்பு!

admin

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் 100க்கும் மேற்பட்ட ஆப்கான் படையினர் பலி

admin

நடுவானில் கொலை மிரட்டல் – இளைஞர் கைது!

admin

Leave a Comment