இந்தியா

இரசாயன – உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் – ராஜ்நாத் சிங்

நாட்டின் செயற்பாடு, உள்கட்டமைப்பை சீர்குலைப்பதற்காக இரசாயன – உயிர்க்கொல்லி ஆயுதங்களை எதிர்தரப்பு பயன்படுத்த கூடும். ஆகையால் மத்திய பாதுகாப்பு படைகள் இவைகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இரசாயன உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்தும் இடங்களில் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இராசாயன – உயிர்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும்.
பாதுகாப்பு பணிகள் மூலம் இராணுவத்தினர் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல பாதுகாப்பு நிறுவனங்களில் புதுமைகள் மற்றும் நவீன ஆயுதங்களை உருவாக்கவும் விஞ்ஞானிகள் பாடுபடுகின்றனர். இந்த இருவருமே நாட்டிற்கு சம அளவில் பங்களிப்பு செய்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

வரவு – செலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பம்

admin

இந்தியாவின் பக்கம் திரும்புகிறது டொனால்ட் ட்ரம்பின் பார்வை!

admin

எந்த நிறத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே நிறத்தால் கிடைத்த வாய்ப்பு.. அவமானத்தை மறக்க செய்த சுந்தரியின் வெற்றி!

Suki

Leave a Comment