இலங்கை

இந்த ஆண்டும் பொதுமக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்!

இந்த ஆண்டும் பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் நிபந்தனைகளுக்கு ஏற்பவும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொலன்னறுவையில் உள்ள புதிய சிறுநீரக மருத்துவமனைக்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு 60 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த சோதனைகளுக்கு தேவையான நிதியைப் பெற, நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தடுப்பூசிகள் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது.

Suki

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ புதிய படத்தில் இணைந்த பிரபலம் யார் தெரியுமா ?

Suki

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறிகள்

admin

Leave a Comment