விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு விழாவில் 605 இலங்கை வீரர்கள் பங்கேற்பு!

தெற்காசிய விளையாட்டு விழாவில் 605 இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நேபாளத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கவுள்ள இம்முறை போட்டிகளில் இலங்கையிலிருந்து 605 வீர வீராங்கனைகளும், 200 பேர் கொண்ட தொழில்நுட்ப அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள காலநிலைக்கு பழக்கப்படுத்திக் கொள்ளும் நோக்கில் மெய்வல்லுனர், நீச்சல் மற்றும் குத்துச்சண்டை ஆகிய போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி நேபாளத்துக்கு அனுப்பி வைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் 27 போட்டி நிகழ்ச்சிகளுக்காக சுமார் 605 வீர வீராங்கனைகள் இலங்கையிலிருந்து பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், 95 பயிற்சியாளர்கள், 13 உடற்கூற்று நிபுணர்கள், 15 மசாஜ் நிபுணர்கள், 10 வைத்தியர்கள், 25 முகாமையாளர்கள், 15 மேற்பார்வையாளர்கள் மற்றும் 5 விசேட ஆலோசகர்கள் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியுடன் பயணிக்கவுள்ளனர்.

Related posts

பெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்

admin

இலங்கை – ஸ்கொட்லாந்து போட்டி கைவிடப்பட்டது!

admin

கரீபியன் பிரீமியர் லீக்: நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி!

admin

Leave a Comment