இலங்கை விளையாட்டு

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!

இந்த வருடத்திற்கான 14வது IPL தொடர் இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 18 ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

8 அணிகள் சார்பில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில் 139 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். ஸ்டீவ் ஸ்மித், ஹர்பஜன் சிங் மேக்ஸ்வெல் ஆரோன் பின்ச் உள்ளிட்ட 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடினார்.

குசல் பெரேரா
திஸர பெரேரா
கெவின் கொத்திகொட மஹேஷ் தீக்சன
துஷ்மந்த சமீர
வனிந்து ஹசரங்க தசுன் ஷானக இசுறு உதான ஆகியோருடன் விஜயகாந்த் வியஸ்காந்தும் இலங்கை வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.