இலங்கை

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே உடல்கள் அடக்கம் செய்யப்படும் – அசேல குணவர்தன

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்த  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியானது.

அதனைத் தொடர்ந்து குறித்த சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் குறித்த தீர்மானித்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்துடன், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் நேற்று போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம்!

Suki

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் உய்குர்களை கண்காணிக்க, தடுத்துவைக்க, திருப்பி அனுப்ப பீஜிங்குடன் ஒத்துழைக்கின்றன?

Suki

10 வயது மாணவியை கம்பியால் அடித்த ஆசிரியருக்கு நடந்த சம்பவம்!

Suki

Leave a Comment