-
கமல் அரசியலுக்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ஒசூரில் நடிகர் ஆதி பேட்டி*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மிருகம் திரைப்பட புகழ் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார்.
முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆதி:
நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். நம்மை பார்த்து மற்றவர்கள் நன்மை செய்ய வேண்டுமென்பதை ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதாகவும்
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு
செல்ல மாட்டேன் என்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.
விஜயகாந்த், கமல் என சினிமாத்துறையினர் தொடர்ந்து அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு:
அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்…
அடுத்து கிளாப், பார்ட்னர் என்கிற தமிழ் படங்களும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக கூறினார்
அவருடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
Add Comment