எஹலியகொடை, பதுவத்தை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 19 வயது இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கட்டிட நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜீத் ரோஹண தெரிவித்தார்.
கட்டிட நிர்மாணத்திற்காக கொண்டுவரப்பட்ட கொங்கிரீட் கலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எஹலியகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Add Comment