இலங்கை

27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்!

136 மில்லியன் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.