விளையாட்டு

லீக்-1: லியோன் அணி சிறப்பான வெற்றி!

பிரான்ஸில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரில், லியோன் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

பார்க் ஒலிம்பிக் லியோனாய்ஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லியோன் அணியும் எங்கர்ஸ் அணியும் மோதின.

பரபரப்பான இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய லியோன் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் லியோன் அணி சார்பில், மெம்பிஸ் டெப்பாய் 21ஆம் மற்றும் 83ஆம் நிமிடங்களில் இரு கோல்கள் அடித்தார்.

மேலும், அணியின் மற்றொரு வீரரான லூகாஸ் பக்வெட்டா போட்டியின் 41ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

லியோன் அணி புள்ளிப்பட்டியலில் 64 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் எங்கர்ஸ் அணி 41 புள்ளிகளுடன் 11ஆவது இடத்திலும் உள்ளன.