இலங்கை யாழ்ப்பாணம்

கொரோனா தொற்றாளர் அடையாளம் – கீரிமலை அந்தியேட்டி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது

கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 12ஆம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தமை தெரிய வந்துள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் கீரிமலைக்கு சென்றிருந்த நேரத்தில் கீரிமலைப் பகுதியில் வாகன பாதுகாப்பு வீதியில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உட்செல்பவர்களை அனுமதிக்கும் பொருட்டு விபரங்களை சேகரிக்கும் இருவர், பிரதேச சபை ஊழியர்கள் மூவர் உட்பட அந்தியேட்டி நடவடிக்கை மேற்கொள்ளும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குருக்கள் என சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – GMOA

admin

நாளை மறுதினம் இலங்கைக்கு வரும் 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்

admin

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்க தயாராகும் சுதந்திரக் கட்சி!

admin

Leave a Comment