இலங்கை வவுனியா

கல்வி நிலையங்களை மூடுங்கள்!- மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தவிசாளர்

கொவிட்-19 தாக்கம் வவுனியாவில் அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு, நகரில் அமைந்துள்ள அனைத்து தனியார் கல்விநிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களை உடனடியாக இடைநிறுத்துமாறு வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர்  மேலும்  தெரிவித்துள்ளதாவது, ‘வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்கின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் நகரிற்குட்பட்ட தனியார் கல்விநிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களின் கல்விச்செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு உரிய தரப்புகளிற்கு அறிவித்தல் விடுக்கின்றோம்.

கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே தனியார் கல்விநிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் இரகசியமான முறையில் மாணவர்களை வரவழைத்து, கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த உத்தரவுகளை மீறி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரியப்படுத்திக்கொள்கின்றோ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா?

admin

துன்னாலையில் வெள்ளத்தில் ஒருவரது சடலம் மீட்பு!

admin

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது – சரத் பொன்சேகாவுக்கு மனோ பதில்!

admin

Leave a Comment