விளையாட்டு

இங்லீஷ் பிரீமியர் லீக்: டோரிஸின் ஹெட்ரிக் கோலால் மன்செஸ்டர் சிட்டி வெற்றி!

இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், 36ஆவது கட்டப் போட்டியில், மன்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது.

சென்.ஜேம்ஸ் பார்க் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில், மன்செஸ்டர் சிட்டி அணியும் நியூகாஸ்ட்ல் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மன்செஸ்டர் சிட்டி 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் மன்செஸ்டர் சிட்டி அணி சார்பில், கென்சலோ 39ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் பெர்ரன் டொரிஸ் 42ஆவது 64ஆவது மற்றும் 66ஆவது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.

நியூகாஸ்ட்ல் அணி சார்பில், எமில் கிராப்த் 25ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜோலிண்டன் 51ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும், ஜோ வில்லொக் 62ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

2020-21ஆவது ஆண்டு பருவக்காலத்துக்கான புள்ளிப்பட்டியலில், மன்செஸ்டர் சிட்டி 83 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூகாஸ்ட்ல் அணி 39 புள்ளிகளுடனும் 16ஆவது இடத்தில் உள்ளது.

Related posts

மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு!

admin

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விபரம் அறிவிப்பு!

admin

ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி நோவக் ஜோகோவிச் தரவரிசையில் முன்னேற்றம்!

admin

Leave a Comment