விளையாட்டு

இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நடால்- சிட்ஸிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளில், ரபேல் நடால் மற்றும் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ்வை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாசுடன் மோதினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், முதல் செட்டை ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் 6-4 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 2-1 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸ் முன்னிலைப் பெற்றிருந்த போது, ஜோகோவிச் போட்டியின் இடைநடுவே விலகினார். இதனால் சிட்ஸிபாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

Related posts

லெய்ஸ்டர் கால்பந்து கழக அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் ரோட்ஜெர்ஸ் நியமனம்

admin

ISL கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சியை 3-0 வீழ்த்தியது கோவா அணி!

admin

விக்கெட் காப்பாளர்கள் துடுப்பாட்டத்திலும் மிளிர அடித்தளம் இட்டவர் கில்கிறிஸ்ட் – சங்கா புகழாராம்

admin

Leave a Comment