உலகம் பிரதான செய்திகள்

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 901பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 28ஆயிரத்து 582பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 948பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 70ஆயிரத்து 447பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 33ஆயிரத்து 287பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

மூன்று ஆண்டுகளில் ஃபேஸ்புக் மூலம் தொண்டு நிறுவனங்களுக்காக ரூ.7,224 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது

admin

கொங்கோவில் இடம்பெற்ற பெட்ரோல் டாங்க் விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

admin

பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!

editor

Leave a Comment