இலங்கை பிரதான செய்திகள்

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பாடசாலைகள் திறப்பு குறித்து கல்வி அமைச்சர் தகவல்!

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

அத்தோடு, சுகாதாரப் பாதுகாப்புடன் மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்துவதில், மேல் மாகாண ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் ஏனைய மாகாணங்களிலும் இதேபோன்ற நடைமுறையை விரைவில் தொடரும் என அமைச்சு நம்புவதாகவும் அவர் கூறினார்.

Related posts

நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்!

admin

கிழக்கு மற்றும் ஊவா பகுதிகளில் மழை அதிகரிக்கும்

admin

5 ஜீ தொழிநுட்பத்திற்கு இதுவரை மன்னார் நகர சபை அனுமதி வழங்கவில்லை- ஞானப்பிரகாசம்

admin

Leave a Comment