இலங்கை பிரதான செய்திகள்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி!

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் மகப்பேற்று வைத்தியர்களால் கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு அந்த குழு அனுமதி வழங்கியதுடன், இதற்கான திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிப்பு!

Editor1

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்

admin

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் ஞானசார தேரர்

Editor1

Leave a Comment