இலங்கை பிரதான செய்திகள்

தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய இணைத்தளம்

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் இணைந்து இந்நாட்டில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்க்கும் மக்களின் வசதிக்காக இணையத்தளம் ஒன்றை வடிவமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மக்கள் பதிவு செய்து கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான இந்த இணையத்தளம் எதிர்வரும் இரண்டு நாட்களில் வௌியிடப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

புதிய இணையத்தளம் ஊடாக பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான திகதி, நேரம் மற்றும் மத்திய நிலையம் ஒன்றை ஒதுக்கிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட “தடுப்பூசி சான்றிதழை” பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெறுகிறார்கள்

Related posts

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயூரன் தெரிவு

admin

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு மேலும் சில நாட்களுக்கு நீடிப்பு!

editor

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா!

admin

Leave a Comment