உலகம்

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,384பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 384பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 61ஆயிரத்து 564பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 265பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 51ஆயிரத்து 818பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 236பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 84ஆயிரத்து 481பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

இன்ஸ்டாகிராம் வழியாக அதிகளவு பணம் சம்பாதிக்கும் பட்டியலில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

Suki

பிரான்ஸில் துப்பாக்கி பிரயோகம் – ஆறு பேர் காயம்!

admin

ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதி!

admin

Leave a Comment