இலங்கை பிரதான செய்திகள்

கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்

நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள் தவிர்க்கப்படுவதாக தெரிவித்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்தார்.

மேலும் கிராம சேவகர்கள், சமூர்த்தி, கிராம அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் விவசாய அதிகாரிகள் போன்றவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்வரை போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

மக்கள் வங்கி உதவி முகாமையாளர் நல்லூர் விபத்தில் சாவு; மின்தடைப்பட்ட வேளையில் துயரம்

admin

21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு!

admin

மஹர சிறைச்சாலை சம்பவம்: அரசாங்கத்திற்கு இழப்பு ஆறு கோடி ரூபாவுக்கும் மேல்

admin

Leave a Comment