உலகம்

எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்க தயாராகும் கனடா

கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை எளிதாக்க கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தொலைக்கட்சி திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு அமைவாக இரண்டு தடுப்பூசி அளவைப் பெற்ற பயணிகளுக்கு தற்போதைய 14 நாள் தனிமைப்படுத்தும் காலத்தை தளர்த்த கனடா திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 

எனினும் கனடாவுக்குள் நுழையும் பயணிகள் கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் குறுகிய காலத்திற்கு தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த திட்டம் சில நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ப்ளூம்பெர்க் கூறினார்.

இதேவேளை ஜூன் 22 அமெரிக்காவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கனடா அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் படுகாயம்!

admin

எவரெஸ்டில் 24வது முறை ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்தார் நேபாள வீரர்!

admin

தேநீர் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் – ஆய்வின் நிறைவில் தகவல்!

admin

Leave a Comment