உலகம்

மூளையை தாக்கும் மர்ம நோய்: 6 பேர் பலி

உலகளாவிய ரீதியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், மூளையைத் தாக்கும் மர்ம நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மர்ம நோயால் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த மர்ம நோய்க்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

தூக்கமின்மை, நினைவுத்திறன் குறைதல், பிரமை உள்ளிட்டவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றது.

இந்த நோய்க்கான காரணம் தெரியாததால் அந்நாட்டு மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

Related posts

சீன எல்லைப் பகுதியில் திடீர் நிலநடுக்கம் : வடகொரியா அணு குண்டு சோதனையா?

admin

அமெரிக்க எச்சரிக்கையையும் மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

admin

விக்கிப்பீடியா இணையத்தளம் முடக்கம்!

admin

Leave a Comment