இந்தியா இலங்கை

இலங்கையுடனான உறவினை துண்டிக்க வேண்டும் – சீமான்

இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவினை துண்டித்து சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருக்கும் இலங்கை அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது.

இது இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்புக்கு பெருங்கேட்டை விளைவிக்கக் கூடிய பேராபத்து. சீனாவின் ஆதிக்கத்தை கண்டிக்கவும், தடுக்கவும் முற்பட வேண்டும்.

நட்பு நாடென இலங்கையுடன் உறவு கொண்டாடுவதை கைவிட வேண்டும். அந்நாட்டின் அத்தனை உறவுகளையும் இந்திய அரசு துண்டிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஓசி பிரியாணி திமுக ; பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலினை விளாசிய முதல்வர்.!

admin

டெல்டா வைரஸ் ஏனைய பகுதிகளுக்கு பரவாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்

Editor1

பொதுமக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை !!

editor

Leave a Comment