இந்தியா

புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், ‘வெள்ளிக்கிழமை உருவாகவுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஜுன் மாதம் 12 ஆம் திகதி மேலும் வலுவடையவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை.

அதேநேரத்தில் இந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மீனவர்கள் இந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்!

admin

கங்கையை தூய்மைப்படுத்தும் உண்ணாவிரத போராட்டம்: மற்றுமொரு சூழல் ஆர்வலர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

admin

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து- உயர்நீதிமன்றம்

admin

Leave a Comment