இந்தியா இலங்கை சினிமா

இந்தி எங்கே.. வடஇந்தியர்களிடம் வறுபடும் தி பேமிலி மேன் 2.. வலுக்கும் எதிர்ப்பு!

தமிழர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் தி பேமிலி மேன் 2 தொடர் தற்போது வடஇந்தியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.


2019ல் அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட் அடித்த சீரிஸ்தான் தி பேமிலி மேன். மனோஜ் பாஜ்பாயி, சந்தீப் கிஷன், பிரியாமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து, பெரிய அளவில் இந்த சீரிஸ் வைரலானது. ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர்.

மனோஜ் பாஜ்பாயி இதில் என்ஐஏ அதிகாரியாக நடித்து இருப்பார். இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
ஈழ போராட்டத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. ஈழ போராளிகள் இந்திய பிரதமரை கொல்ல திட்டமிடுவதாக களம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து செயல்படும் ஈழ பெண் பாத்திரத்தில் சமந்தா ராஜி என்ற பெயரில் நடித்துள்ளார். இந்த தொடர் இந்த கதைக்களம் காரணமாக தமிழர்கள் இடையே கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
முக்கிய ஈழ போராட்டத்தை தவறாக சித்தரிப்பதாகவும், எல்டிடிஇ பிரபாகரனை தவறாக காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதோடு ஈழ போராளிகளுக்கு ஐஎஸ் தொடர்பு இருப்பதாகவும் முற்றிலும் தவறாக பின்னணியுடன் கதை எழுதப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழர்கள் ஒரு பக்கம் இந்த தொடரை எதிர்க்கும் நிலையில் வடஇந்தியர்களும் இந்த தொடரை எதிர்த்து வருகிறார்கள்.
இந்த தொடரின் 70% கதை சென்னையில் நடக்கிறது. அதேபோல் 70% பேர் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் நடித்துள்ளனர். தேவதர்ஷினி, சமந்தா, பிரியாமணி, மைம் கோபி, ஆனந்த் சாமி, அழகம் பெருமாள் என்று தமிழ்நாடு நடிகர்கள் பலர் இதில் நடித்துள்ளனர். இவர்கள் எல்லோரும் முழுக்க தொடரில் தமிழில்தான் பேசி உள்ளனர். இயல்பாக, உண்மையாக இருக்க வேண்டும் எல்லோரும் தமிழில் பேசி உள்ளனர்.
இந்த சீஸனின் முதல் பாகத்தில் பலர் மலையாளத்தில் பேசியது போல இப்போது பலர் தமிழில் பேசி உள்ளனர். இந்த நிலையில் வடஇந்தியர்கள், இந்த தொடரில் இந்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கூறி உள்ளனர். தமிழ் மொழியில்தான் அதிகம் பேசுகிறார்க்ரல். இந்தியை காணோம். இந்தியை புறக்கணித்துவிட்டார்கள் என்று வடஇந்தியர்கள் பலர் கோபம் அடைந்துள்ளனர்.

Related posts

இந்த மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி

Editor1

அதிவேக நெடுஞ்சாலைகளில் பொறுப்பற்ற முறையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை

admin

வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம் – இராணுவ தளபதி

admin

Leave a Comment