இலங்கை

அரிசி வர்த்தகத்தில் தவறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த விரைவில் திட்டம்

அரிசி வர்த்தகத்தில் தவறான நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் வைத்திருக்கும் நெல் இருப்புகளை அறிவிப்பதை கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


புதன்கிழமை நடந்த வாழ்க்கைச் செலவு குழுக் கூட்டத்தில் தனக்கு இந்த அறிவுறுத்தல் கிடைத்ததாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

அனைத்துக் களஞ்சியசாலைகளையும் பதிவு செய்து நெல் இருப்புகளை அரசுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

ஆலை உரிமையாளர்கள் குழுவால் மாபியா பாணியிலான வர்த்தகம் செய்யப்பட்டதால் அரிசி விலை கிலோ 140 ரூபா வரை உயர்ந்துள்ளது என அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

யாழில் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்

Editor1

இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்களை ஐ.நாவில் முறையிட வேண்டும் – சாணக்கியன்

admin

ஒன்பது வளைவு பாலத்திற்கு 100 வருடங்கள் – தேசிய உரிமையாக்க நடவடிக்கை!

admin

Leave a Comment