இலங்கை

எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய தீர்மானம்

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட் நிலமை காரணமாக குறித்த திகதியை முன்னரே அறிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு முன்னரே தெரிவித்தால் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசை இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் 10 அடிக்கு மேல் பாயும் கழிவு நீர்- அரச அதிபர் நேரில் ஆராய்வு!

admin

பார்க் & ரைட், மின் டிக்கெட் முறை ஜனவரி 1 முதல் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

admin

போரதீவுப்பற்றில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் ஆரம்பம்

Editor1

Leave a Comment