இலங்கை

கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய கள ஆய்வு

கம்பாஹா மாவட்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கான நீண்டகால தீர்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

இது தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத், பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கள ஆய்வு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்கள், இரண்டு இரு தடவைகள் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டன.

இதனைக் கருத்திற்கொண்டே வெள்ளம் ஏற்படுவதற்கான கள ஆய்வை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அநாவசிய கட்டுமானங்கள் மற்றும் அங்கிகரிக்கப்படாத குடியேற்றங்கள் காரணமாக கால்வாய்கள் தடைப்பட்டுள்ளனவா என ஆராயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பொதுவாக வைரஸ்கள் நீரில் பரவக்கூடியதல்ல – திஸ்ஸ விதாரண!

admin

பொது சுகாதார பரிசோதகருக்கு எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்!

admin

எரிவாயு விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Editor1

Leave a Comment