இலங்கை

கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கு கால அவசகாசம் பெற கலந்துரையாடல்

நாட்டில் தற்போதுள்ள நிலமையை கருத்தில் கொண்டு, முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு நிதி நிறுவனங்களிலும் பெற்றுக்கொண்டுள்ள கடன் தவணைகளை மீள் செலுத்துவதற்கான சலுகை கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்தாலோசித்து வருவதாக, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மாகாண கல்வி பணிப்பாளர் காரியாலயத்தில் கல்வி பணிப்பாளர்களிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில், முன்பள்ளி தேசியக் கொள்கை வரைவு(Draft), முன்பள்ளிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

Related posts

நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

admin

பயணக்கட்டுப்பாடு நீக்கம் – அனைத்து பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பு

Editor1

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே உடல்கள் அடக்கம் செய்யப்படும் – அசேல குணவர்தன

admin

Leave a Comment