உலகம்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்குடும்பம் அமெரிக்கா அல்லது நியுசிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெய்ன் தெரிவித்துள்ளார்.இரண்டுசாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுவதாக அறிகின்றேன் என தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா குறித்தே முக்கியமாக ஆராயப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நியுசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்கள் குடியேறுவதற்கு இரண்டு வருடங்கள் எடுக்கலாம் என தெரிவித்துள்ள குடும்பத்தின் சட்டத்தரணி அதுவரையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே இருக்கவேண்டிவரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள குடும்பத்தின் சட்டத்தரணி கரினா போர்ட் தடுப்பிலிருப்பதற்கு மாற்றீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தமிழ் குடும்பம் தயார் என தெரிவித்துள்ளார்.தடுப்பிற்கு மாற்றீடு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி குடும்பத்தினரை வேறு நாட்டிற்கு அனுப்புவது அல்லது அங்கு மீள் குடியேற்றுவது பொருத்தமானது இல்லை என தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய மக்கள் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவிலேயே குடியேற அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோளையே விடுக்கின்றர் என தெரிவித்துள்ளார்.மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சில வருடங்கள் பிடிக்கலாம் அது வரை தமிழ் குடும்பத்தினர் தடுப்பிலேயே இருக்கவேண்டியிருக்கும் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரானுடனான உறவுகளை பலப்படுத்த ஜப்பான் விருப்பம்!

admin

சவுதி இளவரசர் உத்தரவுப்படியே துருக்கியில் கஷோகி கொல்லப்பட்டார் – அமெரிக்க உளவுப்படை

admin

ஜப்பான் உலங்கு வானூர்தி காவி கப்பலை தினமும் தூய்மைப்படுத்தும் ​போராட்டம்!

admin

Leave a Comment