Headline இந்தியா

கங்கையை தூய்மைப்படுத்தும் உண்ணாவிரத போராட்டம்: மற்றுமொரு சூழல் ஆர்வலர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

கங்கையை தூய்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் கங்கை படுகைகளில் சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்று சூழல் ஆர்வலரான சந்த் கோபால்தாஸ் (வயது 36) உடல் பலவீனமுற்ற நிலையில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சந்த் கோபால்தாஸின் உடல் பலவீனமுற்றமையால் எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரின் நிலைமை தொடர்பாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாவது, “சந்த் கோபால்தாஸிக்கு தற்போது நீரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன் சர்க்கரை அளவும் குறைந்து உள்ளது.
இருப்பினும் அவர் எதனையும் சாப்பிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதுடன், சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு வழங்குகிறார் இல்லை.
ஆனாலும் அவரை காப்பாற்றுவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது” என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை கங்கையை தூய்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 109 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்று சூழல் ஆர்வலரான ஜி.டி. அகர்வால், (வயது 87) உடல் பலவீனமடைந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

#நாளிதழ் நேரம் | 17.10.2019

admin

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : முக்கிய அறிக்கையை வெளியிட நீதிமன்றம் மறுப்பு!

admin

நீங்களும் வாழ்த்தலாம் – 02.07.2019

admin

Leave a Comment