இந்தியா சினிமா

என்னை பற்றியும் மறைந்த கணவர் நடிகர் ரகுவரன் பற்றியும் ஆபாசமாக அவதூறு பரப்புகிறார்! நடிகை ரோகிணி பரபரப்பு புகார்

தன்னை பற்றியும் மறைந்த தனது கணவர் நடிகர் ரகுவரன் பற்றியும் இழிவான கருத்துகளை கிஷோர் கே சாமி பரப்பியதாக நடிகை ரோகிணி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

முன்னதாக தலைவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் சோஷியல் மீடியா பிரபலம் கிஷோர் கே.சுவாமி 28 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியது, அண்ணல் அம்பேத்கரை ஆங்கிலேய அடிப்பொடி என்றது என கிஷோரின் ட்விட்டர் பக்கங்கள் அவதூறுகளால் அழுக்கேறியவை.

இந்நிலையில் கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி ஓன்லைன் மூலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் தன்னைப் பற்றியும், மறைந்த கணவர் ரகுவரனை பற்றியும் வலைத்தளத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவு செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார். 

Related posts

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு!

admin

எழுவரின் விடுதலையை தமிழக காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்: அழகிரி

admin

தனது சம்பளத்தை இலட்சங்களாக குறைத்துள்ளார் முன்னணி நடிகை!

admin

Leave a Comment