இந்தியா சினிமா

படப்பிடிப்பில் பயங்கரமாக அடி வாங்கிய நடிகர் விஷால்! வெளியான அதிர்ச்சி

விஷால் நடித்து வரும் 31வது படத்தை து.பா சரவணன் என்ற இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக விஷால் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு ஆக்ஷன் காட்சியின் வீடியோவை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அதில் விஷாலை சுற்றி நின்று கொண்டிருக்கும் சண்டை கலைஞர்கள் அவர் மீது கண்ணாடி பாட்டில்களை மாறி மாறி எறியும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இந்த காட்சியின் படப்பிடிப்புக்கு பிறகு விஷால் முகம் கழுவிக் கொள்வது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளன

இதனை அடுத்து இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி தத்துரூபமாக விஷால் நடித்து உள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி என்பவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் அஜித்திடம் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டேன் – பிருத்விராஜ்

admin

வெளியானது விஜய் 64 படப்பிடிப்பு தளங்கள் குறித்த தகவல்கள்

admin

இறுக்கமான உடையில் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்களை கவரும் புகைப்படம்

Rajith

Leave a Comment