இந்தியா உலகம்

கனடாவில் மேலும் இரு இந்தியர்களுக்கு அமைச்சரவையில் இடம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, குறித்த இரு இந்திய கனேடிய அரசியல்வாதிகள் ஒன்ராறியோ கேபினட்டில் அமைச்சர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford கடந்த வெள்ளியன்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதேவேளை ஏற்கனவே அமைச்சரவையில் இந்திய கனேடியரான Prabhmeet Sarkariya (30), சிறு தொழில்கள் மற்றும் red tape துறையில் இணை அமைச்சராக இருந்தார்.

அவர் தற்போது Treasury Boardஇன் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதன்படி Parm Gill (47) குடியுரிமை மற்றும் பல்கலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் ஏற்கனவே Prabhmeet Sarkariya வகித்த சிறு தொழில்கள் மற்றும் red tape துறை இணை அமைச்சர் பொறுப்பு, Nina Tangriயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , தற்போது ஒன்ராறியோ அமைச்சரவையில் மூன்று இந்திய கனேடியர்கள் அமைச்சர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காளி கோவிலில் விமானியை 4வது திருமணம் செய்து கொண்டாரா நடிகை வனிதா விஜயகுமார்? வெளியான அவரின் அதிகாரபூர்வ விளக்கம்

Rajith

ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்ற இந்தியப் பொறியியலாளர் கைது!

admin

5ஆவது நாளாகவும் நீடிக்கும் வைத்தியர்களின் போராட்டம் : சமரச பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு!

admin

Leave a Comment