இலங்கை

கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்கொலை தொடர்பாக இருவர் கைது

கிளிநொச்சி, அம்பாள் குளத்திலிருந்து கடந்த மார்ச் மாதம் சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் நேற்று கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி அம்பாள்குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் , உயிரிழந்தவர் 37 வயதான காமராஜ் திலகேஸ்வரி என்றும் ,அவருக்கு 03 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.

கிளிநொச்சிப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்கள் 23 மற்றும் 40 வயதுடைய நபர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அவர்கள் இருவரும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

யாழில் மீள சந்தைகளை திறப்பது தற்போதுசாத்தியமில்லை

admin

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது

admin

இந்த ஆண்டும் பொதுமக்கள் கொரோனா தொற்றுடன் வாழுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்!

admin

Leave a Comment