இலங்கை பகலவன் செய்திகள் பிரதான செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து இலங்கை வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடைய உத்தரவானது பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிவுத்தல்களுக்கு அமைவாக இந்த தடை உத்தரவு நீக்க முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மத்திய கிழக்கின் கட்டார், ஓமான் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான  பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் இருந்து வரும் பயணிகளிடையே கொவிட்-19 தொற்று அதிகரித்த போக்கு காணப்படுகின்றமையால் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதில் சிரமப்படுகிறார்கள் என்பதை கவனித்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளான, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட மேற்கண்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கான பயணக்கட்டுப்பாடுகள் 2021 ஜூலை 01 முதல் 2021 ஜூலை 13 வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந் நிலையிலேயே பல நிபந்தனைகளுக்குட்பட்டு அந்த உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு 96 மணிநேரங்கள் முன்னர் கொவிட்-19 தொற்றுக்கு எதிர்மறையான பி.சி.ஆர். சோதனை முடிவுகளை கொண்டிருக்க வேண்டும்.

பி.சி.ஆர் அறிக்கையை அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற வேண்டும் மற்றும் தொடர்புடைய கியூஆர் குறியீடுகளை அதில் குறிப்பிட வேண்டும்.

பயணிகள் சமர்ப்பித்த சோதனை அறிக்கைகளின் துல்லியம் குறித்து விமான நிறுவனம் திருப்தி அடைய வேண்டும்.

இலங்கை சுற்றுலா வாரியத்தின் உயிர் பாதுகாப்பு குமிழி கருத்தின் அடிப்படையில் மட்டுமே பயணிகள் தங்கள் ஹோட்டல்களை தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுதல் போன்ற பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

Related posts

வீதியால் சென்ற பெண்ணின் தங்க நகைகளை அறுத்த இருவரை துரத்திப் பிடித்த இராணுவம், பொலிஸார், மக்கள்..!

Suki

குடு அஞ்சுவின் சகா கைக் குண்டுடன் கைது

Suki

பயங்கரவாத தடைச்சட்ட மீளாய்வுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கவுள்ள ஜனாதிபதி

Suki

Leave a Comment