இலங்கை

மிருகக்காட்சிசாலைகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து மிருகக்காட்சிசாலைகளிலும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரிதிகம சபாரி மற்றும் பின்னவல சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆபத்து தெரியப்படுத்தப்பட வேண்டும்

Rajith

மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

admin

நேற்று கொவிட் தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் – கொழும்பில் 402 பேர்!

admin

Leave a Comment